என் வேடத்திற்கு அமிர்கான் தான் கரெக்ட்
14 மே,2017 - 15:17 IST
கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் டாக்குமென்ட்ரி படம், சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ். இப்படம் இன்னும் சில நாட்களில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் எழுதி, இயக்கி உள்ளார். சச்சின் டெண்டுல்கர் எப்படி கிரிக்கெட் வீரர் ஆனார் என்பதை சொல்வதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் மே 26 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சச்சினிடம், உங்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கம் என நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அமிர்கான் தான் பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறேன். அவர் மிகச் சிறந்த நடிகர். அவரத சிறப்பான நடிப்பை நான் லகான் படத்திலேயே பார்த்திருக்கிறேன். அவர் நடிப்பை குறைகூறவே முடியாது. அவருக்கும் கிரிக்கெட்டிற்கும் தொடர்பு உண்டு. அதனால் அவர் தான் சிறந்த தேர்வாக இருப்பார் என்றார்.
0 comments:
Post a Comment