Sunday, May 14, 2017

ஆந்திராவில் களைகட்டும் பாகுபலி மெனு


ஆந்திராவில் களைகட்டும் பாகுபலி மெனு



14 மே,2017 - 15:30 IST






எழுத்தின் அளவு:








திரைப்பட நட்சத்திரங்களின் ஆடைகள், சிகை அலங்காரங்கள் ஆகியவற்றை அடையாளப்படுத்தி ஆடைகள் விற்கப்பட்டது ஒரு காலம். நதியாக கொண்டை, சரோஜாதேவி சேலை. ஸ்ரீதேவி கம்மல், ஸ்ரீப்ரிய மூக்குத்தி விற்றது ஒரு காலம். பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பாகுபலி மூலம் மீண்டும் அந்த காலம் திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே பாகுபலி சேலைகள் ஆந்திராவில் விற்பனைக்கு வந்துவிட்டது. தற்போது பல ஓட்டல்களில் பாகுபலி ஸ்பெஷல் சாப்பாடு அயிட்டங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது.

பல்வாள் தேவா சிக்கன் பிரியாணி, பாகுபலி மட்டன் பிரியாணி, அவந்திகா வெஜ் பிரைட்ரைஸ், தேவசேனா சப்பாத்தி, கட்டப்பா பிஷ் மீல்ஸ், சிவகாமி ஆப்பம் என கலக்குகிறார்கள். அதோடு பாகுபலியை தியேட்டரில் பாருங்கள் என்று விளம்பர போர்டும் வைத்திருக்கிறார்கள். விரைவில் தமிழ்நாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் கடைசியாக விற்றது குஷ்பு இட்லி.


0 comments:

Post a Comment