Sunday, May 14, 2017

ஹாஜி மஸ்தான் கதையில் ரஜினி நடிக்கவில்லை : தயாரிப்பு நிறுவனம் விளக்கம்


ஹாஜி மஸ்தான் கதையில் ரஜினி நடிக்கவில்லை : தயாரிப்பு நிறுவனம் விளக்கம்



14 மே,2017 - 14:41 IST






எழுத்தின் அளவு:








ரஜினி தற்போது 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் படத்தில் மீண்டும் நடிக்கிறார். இதனை தனுஷின் வொண்டர்ஃபார் நிறுவனம் தயாரிக்கிறது. இது மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று செய்தி வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்புகள் வருகிற 28ந் தேதி முதல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், எனது தந்தையை நிழல்உலக தாதா என்றோ, கடத்தல்காரர் என்றோ சித்தரித்து நீங்கள் படம் எடுக்க கூடாது. அவரை எந்த நீதிமன்றமும் குற்றவாளி என்ற சொல்லவில்லை. எனவே அவரை தவறாக சித்தரித்து படம் எடுக்க கூடாது. இதை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தான் எடுக்கப் போவது தாதா கதையே அல்ல என ரஞ்சித் மறுப்பு கூறி இருந்தால்.

இந்நிலையில் தனுஷின் வொண்டர்ஃபார் நிறுவனமும் இன்று தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ஹாஜி மஸ்தானின் கதையே அல்ல. இப்படம் முழுக்க முழுக்க மும்பையை பின்னணியாக கொண்ட கற்பனை கதை என தெரிவித்துள்ளது.


0 comments:

Post a Comment