Sunday, May 14, 2017

மீண்டும் வில்லனாகிறார் பாபி சிம்ஹா


மீண்டும் வில்லனாகிறார் பாபி சிம்ஹா



14 மே,2017 - 13:52 IST






எழுத்தின் அளவு:








வில்லனாக நடித்து வந்த பாபிசிம்ஹா பிறகு ஹீரோவானார். அதுமட்டுமல்ல, இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் சொல்லி வந்தார். ஹீரோவான பிறகு பாபிசிம்ஹாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு... மனோபாலா தயாரித்த பாம்புசட்டை படம்.

இந்தப் படம் உட்பட மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவரது துரதிஷ்டம் பாபிசிம்ஹா ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. அதிலும் குறிப்பாக பாம்பு சட்டை படம் வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டு சில மாதங்களுக்கு முன்புதான் வெளியானது.

ஆனாலும் இரண்டொரு நாட்கள் கூட அந்தப் படம் ஓடவில்லை. தான் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடாமல்போனதால், இனி மீண்டும் வில்லனாக நடிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார் பாபி சிம்ஹா.

அதன்படி, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் கருப்பன் படத்தில் வில்லனாக நடிக்கிறார் பாபிசிம்ஹா. கருப்பன் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இரண்டு கட்டமாக முடிக்க இயக்குநர் பன்னீர்செல்வம் திட்டமிட்டார்.

அதன்படியே மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார்.

திண்டுக்கல் மற்றும் தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்த கருப்பன் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடிக்கும், இப்படத்துக்கு இமான் இசையமைக்க, ஷக்தி ஒளிப்பதிவு செய்கிறார்.


0 comments:

Post a Comment