ஒரு கோடி பார்வையாளர்களை கவர்ந்து விவேகம் டீசர் புதிய சாதனை
14 மே,2017 - 14:22 IST
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விவேகம் படத்தின் டீசர் புதிய மைல்கல்லை எட்டி தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. மே 11 அன்று நள்ளிரவு 12.01-க்கு வெளியான விவேகம் படத்தின் டீசர் வெளியான 12 மணிநேரத்திலேயே, அதிகமானவர்களை கவர்ந்து முதலிடத்தில் இருந்த கபாலி படத்தின் டீசர் சாதனையை முறியடித்தது.
இந்நிலையில், டீசர் வெளியாகிய 68 மணிநேரத்தில் 1 கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. கபாலி டீசர் வெளியாகி 3 நாட்களில் படைத்த சாதனையை விவேகம் டீசர் 68 மணிநேரத்திலேயே படைத்திருப்பது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அஜித் பட டீசர் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படமும் இதுதான்.
ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர், அதிக பார்வையாளர்களை பெற்றிருப்பதற்கு சிவாவின் இயக்கமும், அஜித்தின் லுக், ஸ்டைல், வசனங்கள், அனிருத்தின் பின்னணி இசை, ருபனின் எடிட்டிங் என விவேகம் பட கூட்டணியின் பிரம்மாண்டமே காரணம் என்று கூறுகிறார்கள். விவேகம் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment