Sunday, May 14, 2017

ஸ்கெட்ச் படத்தை வேகமாக முடிக்கிறார் விக்ரம்


ஸ்கெட்ச் படத்தை வேகமாக முடிக்கிறார் விக்ரம்



14 மே,2017 - 12:18 IST






எழுத்தின் அளவு:








விக்ரம்-தமன்னா முதன்முறையாக இணைந்துள்ள படம் ஸ்கெட்ச். விஜயசந்தர் இயக்கி வரும் இந்த படத்தில் பைக் திருடனாக நடிக்கிறார் விக்ரம். வட சென்னை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூரியும் முதன்முறையாக விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரியில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்த நிலையில், தற்போது மறுபடியும் விக்ரம்-தமன்னா இருவரும் பாண்டிச்சேரியில் முகாமிட்டு நடித் துக்கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து சூரியும் விரைவில் பாண்டிச்சேரி செல்கிறாராம்.

அதோடு, இந்த படத்தை முடித்ததும் துருவநட்சத்திரம், சாமி-2 படங்களில் நடிக்க வேண்டியதிருப்பதால் தற்போது மொத்த கால்சீட்டையும் கொடுத்து ஸ்கெட்ச் படத்தில் வேகமாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம் விக்ரம்.

மேலும், இந்த படத்திற்காக விக்ரம் பின்னணி பாடியுள்ள டூயட் பாடல் சென்னையிலுள்ள பின்னி மில்லில் படமாக்கப்பட உள்ளது. அதற்காக, தற்போது செட் போடும் பணிகள் தொடங்கியிருக்கிறது. ஆக, ஜூன் 6-ந்தேதியோடு ஸ்கெட்ச் படப்பிடிப்பு நிறைவு பெறுவதாக சொல்கிறார்கள்.


0 comments:

Post a Comment