பாட்டியாக பிரமோஷன் ஆன அம்மா நடிகை சரண்யா
14 மே,2017 - 12:02 IST
மாஜி ஹீரோயினியான சரண்யா, களவாணி படத்திற்கு பிறகு முன்னணி அம்மா நடிகையாகி விட்டார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அம்மா வேடத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். என்றாலும், சமீபகாலமாக ராதிகா, ஊர்வசி, ரம்யாகிருஷ்ணன், பானுப்பிரியா உள்ளிட்ட பல நடிகைகள் அம்மா வேடங்களில் மறுபிரவேசம் செய்திருப்பதால் சரண்யாவின் மார்க்கெட் டல்லடித்து வருகிறது. என்றாலும், கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார்.
இதில், இட்லி என்றொரு படத்தில் அவர் அம்மா வேடத்தில் இருந்து மாறி பாட்டியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் கோவை சரளா, கல்பனா ஆகியோரும் பாட்டியாகவே நடித்துள்ளனர். கதைப்படி, சரண்யாவின் பேத்தி ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்ள அவரை எப்படி அதிலிருந்து மீட்கிறார் சரண்யா என்பதுதான் கதையாம். ஆக, கதையின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரண்யா, இந்த படம் மறுபடியும் தனது மார்க்கெட்டில் பரபரப்பு கூட்டும் என்று எதிர்பார்க்கிறார்.
0 comments:
Post a Comment