Sunday, May 21, 2017

அம்மாவுக்கு ஜோடி தேடிக்கொடுத்த மகள்


அம்மாவுக்கு ஜோடி தேடிக்கொடுத்த மகள்



21 மே,2017 - 13:00 IST






எழுத்தின் அளவு:








இங்கிலீஷ் விங்லீஸ் படத்தின் பாணியில் ஸ்ரீதேவி நடித்துள்ள படம் மாம். இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. அம்மாவுக்கும், மகளுக்கும் இடையிலான உறவும், பிரிவுமான கதை. இதில் அக்ஷய் கண்ணா, நவாசுதீன் சித்தகி, அபிமன்யூ சிங், சாஜல் அலி நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளர். ரவி உதயவார் இயக்கி உள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக சாஜல் அலி நடித்துள்ளார். ஆனால் ஒரிஜினல் மகள் ஜானவியை நடிக்க வைக்க சிலர் விரும்பினாலும் ஸ்ரீதேவி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஜானவி நடிக்காவிட்டாலும் மாம் படத்தில் அம்மாவுக்கு ஜோடியா அதாவது கணவராக நடிக்க அத்தன் சித்தகியை தேர்வு செய்தது ஜானவிதான்.

பாகிஸ்தானை சேர்ந்த அத்தனன் சித்தகி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். எ மைடி ஹார்ட் என்ற படத்தில் ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்துள்ளார். இவரின் பெரிய ரசிகை ஜானவி. அவரே தன் தாயுடன் நடிக்க அத்னன் சித்தகியை ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளார்.


0 comments:

Post a Comment