Sunday, May 21, 2017

இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இன்று கூடுகிறது: எதிர்ப்புகளை சமாளிப்பாரா விஷால்


இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இன்று கூடுகிறது: எதிர்ப்புகளை சமாளிப்பாரா விஷால்



21 மே,2017 - 12:23 IST






எழுத்தின் அளவு:








திருட்டு விசிடி ஒழிப்பு, இணைய தளங்களில் புதிய படங்கள் பதிவேற்றத்தை தடுத்தல், கியூப் கட்டணம் குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 30ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த அறிவிப்பின்போது தியேட்டர் அதிபர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் கலந்து கொண்டது. ஆனால் சமீப நாட்களாக வேலை நிறுத்திற்கு எதிரான கருத்துக்கள் உருவாகி வந்தது.

விநியோகஸ்தர்கள் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சம்மேளனமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்து பின்வாங்கிவிட்டது. புதிதாக தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையும் வேலை நிறுத்ததில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்து விட்டது. பெப்சி வேலை நிறுத்த விஷயத்தில் நடுநிலை வகிக்கிறது. நாங்கள் தொழிலாளர்கள் நீங்கள் படப்பிடிப்பு நடத்தினால் நாங்கள் வேலைக்கு வருவோம் இல்லாவிட்டால் வரமாட்டோம் என்பது அவர்கள் கருத்து.

வேலை நிறுத்தித்தில் கலந்து கொள்ளாததற்கு சொல்லப்படும் காரணம் என்னவென்றால் இதுபோன்ற வேலை நிறுத்தத்தை அனைத்து சங்கத்தையும் கூட்டி ஆலோசித்து முடிவு செய்து அறிவித்திருக்க வேண்டும். கோரிக்கைகளை முதல்வரிடம் நேரில் சந்தித்து கூறிவிட்டோம். அவரும் தகுந்த நடிவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டார். இந்த நிலையில் வேலை நிறுத்தம் செய்வது அரசுக்கு எதிரான செயலாகும். என்று கருதுகிறார்கள்.

ஆனால் அறிவித்தபடி வேலை நிறுத்தம் செய்தே ஆகவேண்டும் என்பது விஷாலின் நிலைப்பாடு. அவர் இதனை தன்மான பிரச்சினையாக கருதுகிறார். நடந்த முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் இப்போது தமிழ்நாடு திரைப்பட வர்த்த சபை என்ற அமைப்பின் பின்னால் ஒன்றாக திரண்டிருக்கிறார்கள். விஷாலை சங்கதிலிருந்து தனிமைப்படுத்த அவர்கள் காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதோடு தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி வரி சினிமாவை கடுமையாக பாதிக்கிறது. டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் வரை உயர வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.

இன்று நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரக்கூட்டத்தில் பல பிரச்சினைகளை எழுப்ப விஷாலுக்கு எதிரான அணியினர் திட்டமிட்டிருக்கிறார்கள். சங்கங்களின் எதிர்ப்பு, ஜிஎஸ்டி வரி பிரச்சினை இவற்றை சமாளிப்பாரா விஷால் என்பது இன்று மாலை தெரியும். கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment