Sunday, May 21, 2017

துப்பறிவாளன் 'ஆக்ஷன் வெளியீட்டு விழா'


துப்பறிவாளன் 'ஆக்ஷன் வெளியீட்டு விழா'



21 மே,2017 - 14:20 IST






எழுத்தின் அளவு:








விஷாலின் 'விஷால் ஃபிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரிக்க, மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் 'துப்பறிவாளன்'. தெலுங்கில் பிரபலமான அனு இமானுவேல் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா மீண்டும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

மற்றும், வினய், கே.பாக்யராஜ் ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயபிரகாஷ், 'தலைவாசல்' விஜய் ஆகியோரும் நடிக்கும் துப்பறிவாளன் படம், துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் அதிகாரி மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி பேசும் படமாம்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் மிகபெரிய அளவில் பேசப்படும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லி வருகிறார் மிஷ்கின். எனவே, இசைவெளியிட்டு விழாவுக்கு பதிலாக 'ஆக்ஷன் வெளியீட்டு விழா'நடத்தலாம் என மிஷ்கினுக்கு ஆலோசனை கூறியுள்ளார் விஷால். தற்போது இறுதிகட்ட படபிடிப்பில் இருந்து வரும் 'துப்பறிவாளன்' படத்தை ஆகஸ்ட் 11- ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதற்கு முன்னதாக 'ஆக்ஷன் வெளியீட்டு விழா'வை நடத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படத்திற்கு அரோல் கரோலி இசை அமைக்கிறார். கார்த்திக் வெங்கட் ராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.


0 comments:

Post a Comment