Sunday, May 21, 2017

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்: விஷால்


திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்: விஷால்



21 மே,2017 - 19:19 IST






எழுத்தின் அளவு:








சென்னை: வரும் 30-ம் தேதி அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.

இணைய தளத்தில் படங்கள் வெளியாவதை தடுக்க வலியுறுத்தி வருகிற மே 30ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில் வேலை நிறுத்ததிற்கு ஒத்துக் கொண்ட தியேட்டர் அதிபர்கள் சங்கம் பிறகு பின் வாங்கிவிட்டது. பெப்சியும் வேலை நிறுத்ததில் கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கவில்லை. பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து அதை வெளியிட தயாராக இருக்கும் நிறுவனங்களும் வேலை நிறுத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்ககாத நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் இன்று (மே 21-ல் ) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டதில் வரும் 30-ம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment