Friday, June 16, 2017

விவசாயிகள் போராட்டம் தெரிகிறது; எங்க உயிர் பிரச்சினை தெரியலையே? தனுஷ் தந்தை ஆதங்கம்


dhanush and kasthuri rajaதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து டிவிக்களில் புதுப்படங்களின் பாடல்கள் மற்றும் காட்சிகளை பயன்படுத்தக்கூடாது என உத்தரவை அண்மையில் பிறப்பித்தது.


இதுபற்றி பிரபலஇயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா பேசுகையில்….

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் தெரிகிறது. உயிருக்குப் போராடும் சினிமா தயாரிப்பாளர்கள் முகங்கள் தெரிவதில்லை.

ஒருத்தருக்கு சொந்தமான பொருளை அவருடைய அனுமதி இல்லாமல் வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் குற்றமே.

அதைத்தான் இன்று நிறைய டிவி சேனல்கள் செய்கின்றன.

நான் தயாரித்த ‘நாட்டுப்புற பாட்டு’ ‘துள்ளுவதோ இளமை’ என்று என்னுடைய எல்லா படங்களுக்கான சாட்டிலைட் உரிமையை குறிப்பிட்ட சேனலுக்கு மட்டுமே விற்று இருக்கிறேன்.

ஆனால் என் படங்களின் எந்தவித உரிமைகளையும் பெறாத இன்னொரு டி.வி என் படங்களை ஒளிபரப்புகிறது. இது எப்படி நியாயம்? ” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment