Sunday, June 25, 2017

கேர்ள் பிரண்டு கேட்கும் ஆர்யா


கேர்ள் பிரண்டு கேட்கும் ஆர்யா



25 ஜூன், 2017 - 10:28 IST






எழுத்தின் அளவு:






Arya-tweets-that-he-needs-immediate-girl-friend


கோலிவுட்டில் ஆர்யாவை கலாய்ப்பு நடிகர் என்பார்கள். காரணம் படப்பிடிப்பு தளங்களில் யாராவது தன்னிடம் சிக்கிக்கொண்டால் அவர்களை கலாய்த்தே ஒரு வழி பண்ணி விடுவார். முக்கியமாக நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களை தெறித்து ஓட வைத்து விடுவார். அதோடு, தனது டுவிட்டரில் அவ்வப்போது ஏதேனும் தகவல்களை வெளியிட்டு சர்ச்சையிலும் சிக்கிக்கொள்வார்.

அப்படித்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் பூதாகரமாக வெடித்திருந்த சமயம், தனது டுவிட்டரில் ஒரு கிண்டலான பதிவு வெளியிட்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் கோபத்துக்கு ஆளானார். அதையடுத்து டுவிட்டர் பக்கமே வராத ஆர்யா, சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு, தற்போது தான் ஒரு முக்கிய வேலையில் இருப்பதாகவும், தனக்கொரு கேர்ள் பிரண்டு உடனே தேவை என்றும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் ஜாலியாகவும், கிண்டலாகவும் ஆர்யாவுக்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.


0 comments:

Post a Comment