Thursday, June 22, 2017

விஜய்யை வருங்கால முதல்வராக வர வாழ்த்திய பிரபல நடிகர்-அரசியல்வாதி


S Ve Shekharஇன்று விஜய் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.


இதனை ரசிகர்கள் விடிய விடிய தமிழகமே மெர்சல் ஆகும் அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்வி. சேகர் தன் வாழ்த்துக்களை ஒரு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவதற்கான சூழ்நிலை உள்ளது. அவரது ரசிகர்களும் அதை விரும்புகிறார்கள்.

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில்லை. நல்லவர் எவர் வேண்டுமானாலும் வரலாம்.

எல்லாம் அறிந்தவர்தான் வரவேண்டும் என்பதில்லை. எல்லாம் அறிந்தவர்களை அருகில் வைத்திருந்தாலே போதும்.

உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்களும், மக்களின் கஷ்டங்களை அறிந்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்.

எனவே வருங்கால முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துக்களையும் மூத்த சகோதரர் என்ற முறையில் ஆசிகளையும் வழங்குகிறேன்” என தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Actor cum Politician SVe Shekar wishes Vijay as future Chief Minister

S.VE.SHEKHER‏ @SVESHEKHER

வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள் | SV Sekar’s birthday wish to Vijay …

 

0 comments:

Post a Comment