தமிழ் சினிமாவின் புகழை உலகளவில் கொண்டு சென்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.
இவர் நடித்த கபாலி படம் கடந்தாண்டு வெளியானபோது இந்திய சினிமாவே வியக்கும் அளவுக்கு விமானத்தில் வரைந்து விளம்பரம் செய்திருந்தார் கலைப்புலி தாணு.
இந்நிலையில் அதனை மிஞ்சும் வகையில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் விளம்பரத்தை ராட்சத பலூனில் வரைந்து லாஸ் ஏஞ்சலஸ் ஹாலிவுட்டில் பறக்கவிட்டுள்ளனர் லைக்கா நிறுவனத்தினர்.
இதை லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளிலும் பறக்கவிடப் போகிறார்களாம்.
மேலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த வெப்பக்காற்று பலூனை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.
நாடு முழுவதும் உள்ள பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த பலூனில் சவாரி செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து லைகா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் கூறியுள்ளதாவது…
இப்படத்தை நாங்கள் இந்தியத் தயாரிப்பாக பார்க்கவில்லை ஹாலிவுட் படமாக பார்க்கிறோம்.
எனவேதான் இந்த 100 அடி உயர வெப்பக் காற்று பலூனுக்கு 8 மாதங்கள் முன்பாக ஆர்டர் செய்துவிட்டோம்.” என்று தெரிவித்தார்.
2Point0 movie promotions on Hot Air Balloon at Hollywood
0 comments:
Post a Comment