Saturday, June 24, 2017

உலக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சம்மேளனத் துணை தலைவராக கல்யாண் தேர்வு


உலக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சம்மேளனத் துணை தலைவராக கல்யாண் தேர்வு



24 ஜூன், 2017 - 10:54 IST






எழுத்தின் அளவு:






Kalyan-elect-as-world-cinema-producers-vice-president


பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சி.கல்யாண். தமிழிலும் சில படங்களை தயாரித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதன் தலைவராகவும் இரண்டு முறை இருந்தார். சேம்பருக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டதில் சி.கல்யாணின் பங்கு முக்கியமானது. தற்போது அவர் உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கல்யாண் கூறும்போது "எனது பதவி காலத்தில் இந்திய சினிமாக்களின் உலக அளவிலான மார்க்கெட்டிங்கை விரிவுபடுத்த பாடுபடுவேன்" என்றார்.

இதையொட்டி கல்யாணுக்கு பாராட்டு விழா நடந்தது. சேம்பர் தலைவர் ஆனந்தா சுரேஷ், செயலாளர்கள் ரவிகொட்டாரக்கரா, முரளிராமசாமி, பொருளாளர் கிருஷ்ணாரெட்டி, முன்னாள் செயலாளர்கள் அருள்பதி, கட்ராகட்ட பிரசாத், திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், செயலாளர் டி.சிவா, துணைதலைவர் அன்பாலயா பிரபாகரன், பொருளாளர் அழகன் தமிழ்மணி, வினியோகஸ்தர்கள் திருப்பூர்சுப்ரமணி, செல்வின்ராஜ், ஷாகுல்ஹமீது, தேவராஜ், டைரக்டர் பி.வாசு, நடிகர்கள் எஸ்.வி.சேகர், சின்னி ஜெயந்த், சித்ராலட்சுமணன், மேலும் தெலுங்கு, கன்னட, மலையாள பட உலகின் திரளான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


0 comments:

Post a Comment