Friday, June 23, 2017

தயாரிப்பாளர் உத்ரவாதம்: சிக்கல் இன்றி வெளியானது ஏஏஏ


தயாரிப்பாளர் உத்ரவாதம்: சிக்கல் இன்றி வெளியானது ஏஏஏ



23 ஜூன், 2017 - 11:40 IST






எழுத்தின் அளவு:






AAA-movie-released-without-any-problem


சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, சனா நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் இன்று எந்த சிக்கலும் இன்றி வெளிவந்தது. சிம்புவின் சமீபத்திய வரலாற்றில் சொன்ன தேதியில் பிரச்சினையின்றி வெளிவந்திருக்கும் படம் இது தான் என்பதே பெரிய சாதனை. இதற்கும் கடைசி நேரத்தில் ஒரு பிரச்சினை வந்தது.
"தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்க என்னிடம் 25 லட்சம் வாங்கினார். அதனை திருப்பித் தரவில்லை. திருப்பி கேட்டதற்கு அடியாட்களை வைத்து மிரட்டினார். எனது பணத்தை திருப்பித் தந்த பிறகுதான் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்" என்று எம்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து மைக்கேல் ராயப்பன் பதில் மனு தாக்கல் செய்தார். அப்போது "படம் வெளிவர அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டோம். கோர்ட்டில் ஒரு கோடி ரூபாய் கட்டுகிறேன். வழக்கு நடக்கட்டும், படமும் வெளிவரட்டும்" என்று மைக்கேல் ராயப்பனின் வழக்கறிஞர் கோர்ட்டில் கூறினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். மனுதாரார் 25 லட்சம் பிரச்சினைக்குதான் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் படத்தின் தயாரிப்பாளர் 25 லட்சத்துக்கு வங்கி உத்தரவாதம் அளித்து படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூறியது. இந்தப் பணத்தை 30ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் கூறியது. இதனால் சிம்பு படம் எந்த வம்பும் இல்லாமல் இன்று வெளியானது.


0 comments:

Post a Comment