Thursday, June 29, 2017

பெரோஸ் மீதுள்ள நம்பிக்கையில் தயாரிப்பாளர் ஆனேன் : விஜயலட்சுமி


பெரோஸ் மீதுள்ள நம்பிக்கையில் தயாரிப்பாளர் ஆனேன் : விஜயலட்சுமி



29 ஜூன், 2017 - 16:08 IST






எழுத்தின் அளவு:






I-turst-My-husband-says-Vijayalakshmi


நடிகை விஜயலட்சுமி தயாரித்துள்ள படம் பண்டிகை. இந்த படத்தை அவரது கணவரான பெரோஸ் இயக்கியிருக்கிறார். கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன், நிதின் சத்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜூலை 7-ந் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விஜயலட்சுமி பேசுகையில்,

நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது என் வீட்டில் அனைவருமே சப்போர்ட் செய்தனர். ஆனால் படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொன்னதும் எல்லோருமே எதுக்கு ரிஸ்க் எடுக்கிற, இதெல்லாம் வேண்டாம் என்று திட்டினார்கள். ஆனால் இந்த கதை மேல, பெரோஸ் மேல் எனக்கு பெரிய நம்பிக்கை இருந்ததால் நானே தயாரிப்பாளராக முடிவு செய்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. ரொம்ப சந்தோசமாக, பெருமையாக உள்ளது.

இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் முதன்முறையாக அதிகப்படியான ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார் கிருஷ்ணா. எந்த நடிகரும் இந்த மாதிரி ரோலில் நடிக்க மாட்டார்கள். அவர் தைரியமாக நடித்தார். அதேபோல் இந்த கதையை எழுதும்போதே கயல் ஆனந்தி தான் ஹீரோயின் என பெரோஸ் முடிவு பண்ணி விட்டார். இந்த இன்னோசென்ட் கேரக்டரை அவர் தான் பண்ண முடியும் என்று நினைத்தார். முதலில் அவரைத்தான் பிக்ஸ் பண்ணினோம். அவர் வேடம் ரொம்ப கியூட்டாக வந்துள்ளது. அதேமாதிரி பருத்திவீரன் சரவணன் இன்னொரு ஹீரோ மாதிரியான வெயிட் ரோலில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை ஆரம்பித்ததில் இருந்தே பல பிரச்னைகளை சந்தித்தேன். எனக்கும், பெரோஸ்க்கும் சண்டை நடந்திருக்கு. அப்போது தான் படம் தயாரிப்பது எவ்வளவு கடினமான விசயம் என்பது எனக்கு தெரிந்தது. நடித்து விட்டு கேரவனுக்குள் போய் உட்கார்ந்து வந்த நான் ஒரு தயாரிப்பாளரின் பிரச்சினைகளை உணர்ந்தேன். மேலும், இந்த படத்தை ஆரம்பித்தபோது எனக்கும், எனது கணவரான படத்தின் டைரக்டர் பெரோஸ்க்கும்தான் நம்பிக்கை இருந்தது. ஆனால் படம் பண்ணி முடித்த பிறகு ஆரா பிலிம்ஸ் மகேஷ்க்கும் இந்த படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டு படத்தை வெளியிட முன்வந்திருக்கிறார். ஒரு நேரத்தில் இனிமே படம் தயாரிக்கவே கூடாது என்று நினைத்திருந்த நான், இப்போது பண்டிகை படம் சிறப்பாக வந்திருப்பதை பார்த்த பிறகு இன்னும் 4 படங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் விஜய லட்சுமி.


0 comments:

Post a Comment