திலீப்பை பணம் கேட்டு மிரட்டிய பல்சர் சுனில்
25 ஜூன், 2017 - 15:33 IST
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து திரும்பி வரும் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாவனாவின் காரை மறித்து, கடத்திச்சென்று சுமார் இரண்டு மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் முதன்மை குற்றவாளி தான் பல்சர் சுனில் என்பவன். போலீசாரால் தேடப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டபோது தான், தான் இந்த குற்றத்தை செய்தேன் என ஒப்புக்கொண்டும் விட்டான். தற்போது சிறையில் உள்ள இவன் மலையாள நடிகர் திலீப்பிற்கு ஒரு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்னதான் இருந்ததாம் அந்த கடிதத்தில்..? திலீப் தனது விஷயத்தில் சீக்கிரம் ஒரு நல்ல முடிவை சொல்லவேண்டும் என்றும், மக்கள் இந்த கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் மறைந்துள்ளவர்கள் யார் என தன்னை கேட்டு நெருக்கடி பண்ணுவதாகவும் அதில் கூறியுள்ளானாம்.சம்பந்தப்பட்ட நடிகையே தன்னை மன்னிக்க தயாராக இருக்கும் சூழலில் நான் இன்னும் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் எனவே பேசியபடி தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து செட்டில் செய்யுமாறும் அதில் கூறியுள்ளானாம்.
ஏற்கனவே பாவனா கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருக்கிறது என கூறப்பட்டு அதை அவர் மறுத்துவந்த நிலையில் பல்சர் சுனி(ல்) இவ்வாறு கடிதம் எழுதியதாக கூறப்படுவது திலீப்பை அதிர்ச்சியாக்கி உள்ளது. இதனால் தனது பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பல்சர் சுனி(ல்) செயல்படுவதாகவும் அதன் தொடர்ச்சியாக ஒன்றரை கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இதுகுறித்து போலீஸார் தீர விசாரிக்கவேண்டும் என்றும் போலீஸில் புகார் செய்துள்ளாராம் திலீப்.
0 comments:
Post a Comment