விபுல்ஷாவின் அழைப்பை நிராகரித்த சைப் அலிகான்
25 ஜூன், 2017 - 12:44 IST
வகாத், ஆன்கின், நமஸ்தே லண்டன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றவர் டைரக்டர் விபுல் அம்ருத் லால். இவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சைப் அலி கான் நடிக்க உள்ளதாகவும், இது மருத்துவம் சார்ந்த கதை எனவும் கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் தனது படத்தில் நடிக்கும்படி விபுல்ஷா விடுத்த அழைப்பை ஏற்க சைப் அலி கான் மறுத்து விட்டாராம். இதனை விபுல்ஷாவே உறுதி செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஆமாம். நான் அடுத்த படம் ஒன்றைய இயக்க உள்ளேன். இப்படம் மனிதர்களில் மருந்துகளை சோதனை செய்து பற்றிய படம். ஆனால் இப்படத்தில் சைப் அலி கான் நடிக்க போவதில்லை என்றார்.
0 comments:
Post a Comment