விக்ரமிற்கு பாபி சிம்ஹா வில்லனானது உறுதியானது
24 ஜூன், 2017 - 11:52 IST
சிங்கம் 3 படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். முதல் பாகத்தின் தொடர்ச்சிக்காக த்ரிஷாவும் நடிக்கிறார். விக்ரம் முதல் பாகத்தில் வந்த ஆரிச்சாமியாகவே நடிக்கிறார். கதைப்படி வயதாகி விடுவதால் சால்ட் அண்ட் பெப்பர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சாமி படத்தின் பவர்புல் வில்லனாக பெருமாள் பிச்சை என்ற கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் நடித்தார்.
இந்த வில்லன் கேரக்டருக்கு பொருத்தமான ஆளை தேடிக் கொண்டிருந்தார் ஹரி. இப்போது பாபி சிம்ஹாவை வில்லனாக்க தீர்மானித்து விட்டார், இரண்டாம் பாக கதைப்படி, பாபி சிம்ஹா பெருமாள் பிச்சையின் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் ஹரி கூறியிருப்பதாவது:
விக்ரமுடன் மோத அவருக்கு ஈடுகொடுக்ககூடிய ஒருவர் தேவை என்பதால் வில்லனை கண்டுபிடிப்பதற்கு நிறைய மெனக்கெட்டேன். வில்லத்தனமும் இருக்க வேண்டும். நல்ல நடிப்பும் இருக்க வேண்டும் அதனால்தான் பாபி சிம்ஹாவை தேர்வு செய்தேன். முதல் பாகத்தின் வில்லன் பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் இரண்டாம் பாகம் வில்லன் இருப்பார் என்றார்.
0 comments:
Post a Comment