Wednesday, June 28, 2017

செளந்தர்யா ரஜினியை கவர்ந்த காஜோலின் மிரட்டலான நடிப்பு


செளந்தர்யா ரஜினியை கவர்ந்த காஜோலின் மிரட்டலான நடிப்பு



28 ஜூன், 2017 - 13:22 IST






எழுத்தின் அளவு:






Soundarya-rajini-admired-of-kajol-acting


1997ல் ராஜீவ்மேனன் இயக்கிய மின்சார கனவு படத்தில் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை காஜோல். அரவிந்த்சாமி-பிரபுதேவா நடித்த அந்த படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காத அவர், தற்போது செளந்தர்யா ரஜினி இயக்கியுள்ள விஐபி-2 படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். தனுஷ் நாயகனாக நடித் துள்ள இந்த படத்தில் நெகடீவ் ரோலில் நடித்துள்ளார் காஜோல். ஜூலை 28ந்தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்திற்கு தனுஷ் கதை வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும், இந்த படத்தின் டிரெய்லர் தமிழ் ரசிகர்களைப்போன்று தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக, 42 வயதாகும் காஜோல் இந்த படத்தில் வசுந்தரா என்ற பிரபல தொழிலதிபர் ரோலில் நடித்திருக்கிறார். கார்பரேட் உலகில் நடைபெறும் தொழில் போட்டிக்கதையில் தயாராகியுள்ள இந்த படத்தில் அரசியல் பின்னணியில் உள்ள தொழிலதிபராக நடித்துள்ள காஜோலின் நடிப்பு மிரட்டலாக வெளிப்பட்டிருக்கிறதாம். அவரது பர்பாமென்ஸ் ஒவ்வொரு காட்சிகளிலும் அபாரமாக வெளிப்பட்டதைக்கண்டு பலமுறை ஸ்பாட்டிலேயே அவரைக் கட்டித்தழுவி தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார் செளந்தர்யா ரஜினி.


0 comments:

Post a Comment