சினிமாவில் நடிக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா
23 ஜூன், 2017 - 11:57 IST
பிரபல கன்னட எழுத்தாளர் வி.லங்கேஷின் மகள் கவிதா லங்கேஷ் சம்மர் ஹாலிடேஸ் என்ற பெயரில் குழந்தைகள் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது. இந்தப் படத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா முதல்வராகவே நடிக்கிறார். கோடை விடுமுறைக்காக பெங்களூருக்கு வரும் குழந்தைகள் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசுவது போன்ற காட்சி படத்தில் இடம்பெறுகிறதாம். இதில் சித்தராமையா நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
எழுத்தாளார் லங்கேஷ் எனது நெருங்கிய நண்பர். அவரது மகள் கவிதாவை சின்ன குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே தெரியும். அவர் இயக்கும் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று பலமுறை கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கு நடிக்கத் தெரியாது என்று நான் பிடிவாதமாக மறுத்து வந்தேன். சமீபத்தில் சந்தித்து படத்தின் கதையை கூறி நான் முதல்வராகவே நடிக்க வேண்டும் என்றார். குழந்தைகளுக்காக எடுக்கப்படும் நல்ல படம். அதில் நான் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வது போன்ற காட்சி. இதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார் சித்தராமையா.
0 comments:
Post a Comment