Thursday, June 22, 2017

ரம்ஜான் ரிலீஸ்: மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுடன் திலீப் சமரச பேச்சு..!


ரம்ஜான் ரிலீஸ்: மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுடன் திலீப் சமரச பேச்சு..!



22 ஜூன், 2017 - 14:40 IST






எழுத்தின் அளவு:






Dileep-compromise-with-multiplex-theatres


இந்த ரம்ஜான் பண்டிகை சீசனில் மலையாளத்தில் இந்த வாரமும் அடுத்த வாரமும் சேர்த்து ஆறு படங்கள் வரை ரிலீஸாக இருக்கின்றன. ஆனால் இந்தப்படங்களின் ரிலீசிலும், வசூலிலும் முக்கிய பங்கு வகிக்கும் கொச்சி மல்டிபிளக்ஸ் எனப்படும் கொச்சியில் லுலு காம்ப்ளக்ஸில் உள்ள பி.வி.ஆர் சினிமாஸில் கடந்த இரண்டு மாத காலமாகவே மலையாள படங்களை திரையிடுவதில் சிக்கல் நீடித்து வந்தது.. இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதில் மற்ற தியேட்டர்களுக்கு தருவதை விட தங்களுக்கு பங்கு சதவீதம் அதிகம் வேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள்..
இவற்றுடன் சினி போலிஷ் சென்டர் ஸ்கொயர் மால், பி.வி.ஆர் ஒப்ரன் மால் கொச்சி, திருச்சூர் ஷோபா ஐநாக்ஸ் ஆகிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் இந்த பங்கு கேட்கும் போராட்டத்தில் குதித்திருந்தன. இதனால் ரம்ஜான் பண்டிகையில் படங்கள் ரிலீஸாகாதோ என்கிற சூழல் ஏற்பட்டது.. ஆனால் தற்போது கேரள பிலிம் எக்சிபிடர்ஸ் சங்க தலைவராக பொறுப்பேற்று இருக்கும் நடிகர் திலீப், போர்க்கொடி தூக்கிய இந்த தியேட்டர் நிர்வாகத்தினருடன் கலந்து பேசி ஒரு சுமூகமான உடன்பாட்டை கொண்டு வந்துள்ளார்.. இனி இந்த தியேட்டர்களில் மலையாள படங்களை திரையிடுவதில் சிக்கல் இராது என்றே தெரிகிறது..


0 comments:

Post a Comment