நடிகர் கவுண்டமணி நலமாய் இருக்கிறார்
22 ஜூன், 2017 - 18:43 IST
நடிகர் கவுண்டமணியைப் பற்றி வரும் வதந்திக்கு முடிவே இல்லை போலிருக்கிறது. இன்றும் கவுண்டமணி பற்றி வதந்தி. வழக்கம்போல் அவர் இறந்துவிட்டதாக பரவிய வதந்தியினால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டடது. இன்னொரு பக்கம் பத்திரிகை அலுவலகத்துக்கு தொலைபேசி செய்தி உண்மையா என்றும் கேட் ஆரம்பித்துவிட்டனர். இந்த தகவல் கவுண்டமணிக்கு தெரிய வந்ததும், தன்னுடைய மக்கள் தொடர்பாளர் மூலம் ஒரு அறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறார்.
“வழக்கம் போல் முகம் தெரியாத, விலாசம் இல்லாத, அந்த புண்ணியவான் நடிகர் கவுண்டமணி அவர்களைப்பற்றி தவறான, உண்மைக்கு மாறான வதந்தியை கிளப்பி விட்டுள்ளார். கவுண்டமணி அவர்கள் நலமாய் இருக்கிறார். கதை விவாதத்தில் தினமும் ஈடுபாட்டோடு செயலாற்றி வருகிறார். தன்னைப்பற்றி தவறான தகவல் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் காவல் துறை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்."
என்று கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment