Thursday, June 29, 2017

எந்த கட்சியிலிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை! ஊர்வசி


எந்த கட்சியிலிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை! ஊர்வசி



30 ஜூன், 2017 - 01:09 IST






எழுத்தின் அளவு:






எந்த-கட்சியிலிருந்தும்-எனக்கு-அழைப்பு-வரவில்லை!-ஊர்வசி


யதார்த்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த வெகு சிலரில், நடிகை ஊர்வசியும் ஒருவர். எழுத்தாளராக, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளராக, சிறந்த நடிகையாக, பன்முக திறன் உடைய இவர், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என, பல மொழிகளில், 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, கூத்தன் என்ற தமிழ் படத்தில், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரோலில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில், ஊர்வசி, தன் திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கூத்தன் படம் பற்றி?

துணை நடிகர்களை பற்றி சொல்லும் படம் இது. சினிமாவில், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற, ஒரு பெரிய பிரிவு உள்ளது. அவர்களை மையமாக வைத்து எடுக்கும் படம் இது. பெரும்பாலான நடிகர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா வந்து தான், பெரிய நடிகர்களாக மாறியுள்ளனர். இந்த படத்தில், நானும் ஒரு ஜூனியர் நடிகையாக தான் வருகிறேன். பெரிய ஆர்ட்டிஸ்ட்டாக வர ஆசைப்பட்டு, அப்படி எதும் ஆக முடியாமல், ஒரு கட்டத்தில், சின்ன கேரக்டர் தான் நமக்கு நிறைய கிடைக்கிறது. அதை வைத்து வாழ்வோம் என, திருப்தி அடையும் ஒரு கேரக்டராக, இந்த படத்தில் நடிக்கிேறன். இந்த படத்தை, வெங்கி இயக்குகிறார்.

தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என, பல மொழி படங்களில் நடித்த நீங்கள், சினிமாவில் கற்றுக் கொண்ட விஷயம்?

சினிமா என்பது ஒருமுறை மட்டும் படித்து, தெரிந்து கொள்ளும் கல்லுாரி அல்ல; தினம் தினம் கற்று கொள்ள வேண்டும். இதில், நானும் ஒரு மாணவி தான். எல்லா வகையிலும், அடுத்தகட்ட முன்னேற்றம் வந்து கொண்டு இருக்கிறது; இதற்கு தகுந்தது போல், நாம் மாறவில்லை என்றால், பின்தங்கி விடுவோம்.

உங்கள் வாழ்வை மாற்றிய முந்தானை முடிச்சு படம் பற்றி சொல்லுங்க?

அந்த படத்தில், முதலில் நடிக்க இருந்தவர் என் அக்கா கலா ரஞ்சனி தான். அந்த நேரத்தில், அக்கா, மலையாளத்தில் அறிமுகமாகி, நிறைய படங்கள் வெளியாகின.பாக்யராஜ் சார் இரண்டு மாதம் தொடர்ந்து, 'கால்ஷீட்' கேட்டதால் அவர்களால், முந்தானை முடிச்சு படம் பண்ண முடிய வில்லை. எனக்கு ஸ்கூல் விடுமுறை நேரம் என்பதால், சரியாக அமைந்தது. அப்பவும் சரி, இப்பவும் சரி; அது என் வாழ்வில் நடந்த, அழகான கனவு மாதிரி. இது முழுக்க, பாக்யராஜ் படம்; அவர் சொன்னதை செய்தேன். மறுபடி அது போல் நடிக்கும்படி கூறினால், கண்டிப்பாக முடியாது.

பாக்யராஜ் பற்றி?

ஸ்கூலுக்கு வர விருப்பம் இல்லாத மாணவரைப் போல தான், என்னை அவர் நடத்தினார். கொஞ்சம் சேட்டை, அடம் பிடிப்பேன். அதனால், அதட்டியும், அப்படிமா, இப்படியுமா என, சொல்லிச் சொல்லி வேலை வாங்கினார்.

நடிகையானதை முழுமையாக ஏற்றுக்கொண்டீர்களா?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்; முந்தானை முடிச்சு படம் முடிந்த அன்று மாலையே, ஊட்டியில் வேற ஒரு படப்பிடிப்புக்கு கிளம்பிட்டேன். என்னால் அந்த விஷயத்தை ரொம்ப நாள் ஏற்கவே முடியவில்லை. எப்போது படப்பிடிப்பை நிறுத்திட்டு, ஸ்கூல் போவேன் என, தான் நினைத்தேன். ஆனால், தொடர்ந்து படங்கள் வந்து கொண்டே இருந்தன. 50, 60 படங்கள் நடிக்கும் வரை ஜீரணிக்கவே முடியவில்லை. மலையாளத்தில் சில படங்கள் நடித்தேன். அப்போது தான் யோசித்தேன்; சினிமா என்பது ரொம்ப அதிர்ஷ்டமான ஆளுங்களுக்கு கிடைக்கும் வேலை; அந்த வேலையை நாம சரியா செய்ய வேண்டும் என, சமாதானப்படுத்திக் கொண்டேன்.

உங்களுக்குள் கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கே?

இல்லை... இல்லை... நான் கொஞ்சம் சீரியசான ஆள்; கோபம் வரும். ஆனால், சினிமா என்னை மாற்றி விட்டது. நான் செய்த கேரக்டர்கள் என்னை மாற்றின. ஒரு கட்டத்துக்கு பின், என்னை நான் மாற்றிக் கொண்டேன் என்பது தான் உண்மை; நகைச்சுவையும், சங்கீதமும் பிறவியிலேயே வர வேண்டும்.

எப்போது அரசியலுக்கு வரப் போகிறீர்கள்?


நல்லவேளை, இதுவரை எந்த கட்சியில் இருந்தும் எனக்கு அழைப்பு இல்லை. நீங்கள், கூப்பிட வைத்து விடாதீர்கள். இப்போது தான், நேரத்துக்கு சாப்பிட்டு, நன்றாக துாங்கி எழுகிறேன். அரசியலில் எனக்கு பெரிய ஆர்வம் எதுவுமில்லை.

0 comments:

Post a Comment