Tuesday, June 27, 2017

அடங்காதவனை அசர வைக்கும் வனமகன்


AAA and Vanamagan movies Box office collectionகடந்த ஜீன் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிம்புவின் ‘AAA’ படம் மற்றும் ஜெயம் ரவியின் வனமகன் படம் ரிலீஸ் ஆனது.


நேற்று ரம்ஜான் என்பதால் நான்கு நாட்கள் இப்படத்திற்கு ஓப்பனிங் கிடைத்தது.

இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் சிம்பு படத்திற்கு இருந்த முதல் நாள் எதிர்பார்ப்ப்பு நாளடைவில் தேய்ந்து போனது.

அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இப்படம் கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் சுமார் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குனர் விஜய்யின் திரைக்கதை, காட்டுவாசி கதை, ஜெயம் ரவியின் நடிப்பு, சாயிஷாவின் அழகான நடனம் ஆகிய நல்ல விமர்சனங்களுக்காக இப்படம் நல்ல வசூலை பெற்றுள்து.

கடந்த 4 நாட்களில் இந்த படம் தமிழகத்தில் ரூ.7.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வசூலில் நெருங்கி வந்தாலும் இனிவரும் நாட்களில் வனமகன் அடங்காதவனை அசர வைத்துவிடுவான் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

AAA and Vanamagan movies Box office collection

0 comments:

Post a Comment