மகள் அறிமுகமாவதில் சிக்கல்
21 ஜூன், 2017 - 13:08 IST
பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான். இவர் சினிமாவில் களம் இறங்க இருப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் வெளியான நிலையில், சிலதினங்களுக்கு முன்னர் அபிஷேக் கபூர் இயக்கும், "கேதர்நாத்" படத்தில், சாரா நடிப்பது உறுதியானது. ஹீரோவாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சாராவின் அம்மாவான அம்ரிதா சிங். சமீபத்தில் சுசாந்த் சிங், நடிப்பில் வெளியான ராப்தா படம் தோல்வியை சந்தித்தன் எதிரொலியாக, தன் மகளை சுசாந்த்துடன் அறிமுகம் செய்ய அம்ரிதா தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் சாரா அலிகான் நடிப்பாரா, மாட்டாரா...? என இயக்குநர் குழப்பத்தில் இருக்கிறார்.
0 comments:
Post a Comment