Thursday, June 29, 2017

சினிமாவானது மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை


சினிமாவானது மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை



29 ஜூன், 2017 - 14:11 IST






எழுத்தின் அளவு:






Malasiya-gardern-workers-life-become-movie


மலேசியாவில் தோட்ட தொழிலாளர்களாக உள்ள தமிழர்களின் கதை தோட்டம் என்ற பெயரில் சினிமாவாக தயாராகி உள்ளது. புளூ ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை அரங்கண்ணல்ராஜ் இயக்கி உள்ளார். சிங்கைஜெகன், தனா, ரூபன் லோகன், ஜி.வி. அகில்பர்மன் ஆகியோர் நடித்துள்ளனர். விவியாஷான் என்ற சீன நடிகை முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் அரங்கண்ணல் ராஜ் கூறியதாவது: ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டே. இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும்.. அந்த விவசாய கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப் பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே. அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகி விட்டது.

தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கை மாறி விட்டது. அப்படி கை மாற இருந்த ஒரு தோட்டத்தை போராடி எப்படி மீட்கிறார்கள் என்பது கதை. 200 வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சனையை இதில் அலசியிருக்கிறோம்.

அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ்ப்பையனுக்கும், சீனப்பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம். மலேசிய நடிகர் நடிகைகள் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து தோட்டம் படத்தை உருவாக்கி உள்ளோம். விரைவில் உலகமெங்கும் தோட்டம் வெளியாகிறது என்றார் இயக்குனர்.


0 comments:

Post a Comment