நடிகர்கள் : கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி, சூப்பர் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, மயில்சாமி, கயல் தேவராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : ஆர் கண்ணன்
இசை : தமன்
ஒளிப்பதிவாளர் : பிகே வர்மா
எடிட்டர்: ஜி. மதன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : ஆர் கண்ணன்
கதைக்களம்…
என்ஜீனியரிங் முடித்துவிட்டு சரியான வேலை கிடைக்காததால், கௌதமும் ஆர்.ஜே. பாலாஜியும் சென்னை ரிச் ஸ்ட்டீரிட்டில் எலக்ட்ரானிக் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர்.
ஒருமுறை அமைச்சர் சூப்பர் சூப்பராயன் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த செல்கின்றனர். அமைச்சரின் மச்சான் ஸ்டண்ட் செல்வா கேமராவுக்கான பணத்தை தராமல் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.
இதனிடையில் சரியான வசதியில்லாத காரணத்தினால் பல இன்ஜீனியரிங்களை மூட உத்தரவுவிடுகிறார் அமைச்சர்.
இதனால் ஹீரோயின் ஷ்ரத்தா மற்றும் பல மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு மாணவன், தற்கொலை செய்துக் கொள்ள, அதை நேரில் பார்க்கிறார் கௌதம்.
எனவே அமைச்சரை பழிவாங்க, அவர் செய்யும் ஊழல் மற்றும் அவர் பெறும் லஞ்ச வீடியோ ஆதாரத்தை டெக்னிக்கலாக படம் பிடித்து, யூடிப்பில் பதிவேற்றம் செய்கிறார் கௌதம்.
இதனால் தன் பதவிக்கு ஆபத்து வர, அமைச்சர் என்ன செய்தார்? மற்ற மாணவர்களுக்கு நீதி கிடைத்ததா? இவருக்கான சிசிடிவி பணம் கிடைத்தா? என பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் பதில் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.
கேரக்டர்கள்…
ரங்கூனில் முதல் வெற்றியை தொடர்ந்து இதில் சிக்ஸர் அடித்துள்ளார் கௌதம் கார்த்திக்.
அவருக்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது சிறப்பு. இன்ஜினியரிங் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு யாரிடமோ கையை கட்டி வேலை செய்யாமல் தானே செய்யும் பிஸினஸ் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாய் அமையும்.
கூவத்தூர் லாட்ஜ், ரியல் எஸ்டேட், கொம்பன் வில்லன், நமீதா ஸ்நேகா காஜேஜ் விளம்பரம் என எதையும் விட்டு வைக்காது ஆர்.ஜே. பாலாஜி தரும் டைமிங் கவுண்டர்கள் படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறது.
ஐடி மாணவர்கள் படும் அவஸ்தையை ஒரு காட்சியிலும் மற்ற காட்சியில் ஐடி மாணவர்களின் சிறப்புகளை ஆர்ஜே பாலாஜி சொல்லும் காட்சிகள் அசத்தல். (ஆனால் அதை ஹீரோ சொல்லியிருக்கலாமே..?)
நாயகி ஷ்ரத்தா அழகிலும் நடிப்பிலும் ரசிகர்களை ஈர்க்கிறார். காதலை வெளிப்படுத்தும் விதம் புதுமை.
கௌதம் காதலை சொல்ல, பிறகு முடிவை சொல்கிறேன் என ஷ்ரத்தா சொல்லாமல் வேறுமாதிரியாக சொல்வது ரசிக்க வைக்கிறது.
20 வருசத்துக்கு அப்புறம் பிடிச்சா அப்போ மேசேஜ் பண்றேன் என இவர் சொல்லும்போது, அப்போ சாரி ஆண்ட்டி என என் மகன் ரிப்ளை செய்வான் என கௌதம் கூறுவது நச்.
ஒரு காதலுக்காக 20 வருடங்கள் காத்திருக்க முடியாது என்பதை நாசூக்காக சொன்னதற்காக வசனகர்த்தாவை பாராட்டலாம்.
ஸ்டண்ட் செல்வா சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். தன்னை கொன்றுவிட்ட மாமாவிடம் எதற்காக உண்மையை சொல்லனும் என்று உயிர் விடும் காட்சி அருமை. அந்த ரூம் பைட்டும் பாராட்டுக்குரியது.
அரசியல்வாதி கேரக்டரில் மிடுக்காக இருக்கிறார் சூப்பர் சுப்பராயன். வீடியோ ஆதாரத்தில் மாட்டிக் கொள்ளும்போது, அதற்கு வேறு ஒரு மாதிரியான டயலாக் பேசுவது அரசியல்வாதிகளுக்கே உரிய குணத்தை பிரதிபலிக்கிறார்.
பஞ்சாயத்து செய்ய வரும் மயில்சாமி, கம்யூட்டர் பார்ட்ஸ் பெயர்கள் தெரியாமல் தவிப்பது அருமை.
ஒரே காட்சியில் வந்தாலும், ஓர் ஏழை அப்பாவின் தவிப்பை உணர வைக்கிறார் கயல் தேவராஜ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
என்னை மெதக்கவிட்ட பாடல் நல்ல தேர்வு. இரண்டே மணி நேரத்தில் சொல்ல வந்த விஷயத்தை இயக்குனர் சரியாக சொல்லியிருப்பது சூப்பர்.
பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது. இதுவரை ரசிகர்களுக்கு போதும் என மற்ற காட்சிகளை வெட்டி எடுத்த எடிட்டர் ஆர்.கே. செல்வாவுக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய இயந்திர வாழ்க்கையின் பலம் இன்ஜினியரிங் மாணவர்களே என்பதை சொல்லி மாணவ சமுதாயத்தை உயர்த்தியிருக்கிறார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் போரடிக்காமல் இயக்கியிருக்கிறார் கண்ணன்.
இப்படத்தை நம்பிக்கை வைத்து ரிலீஸ் செய்திருக்கும் தனஞ்செயனை கைகுலுக்கி பாராட்டலாம்.
இவன் தந்திரன்… இன்ஜினியரிங் மந்திரம்
0 comments:
Post a Comment