நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து பேசிய அவர், அடுத்த மாதமும் ரசிகர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
தற்போது ‘காலா’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அவர் இடையிடையே அரசியல் தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருகிறார். தமிழக அரசியல் தொடர்பான புத்தகங்களையும் படித்து வருகிறார்.
இதை அவரே சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது ஒத்துக் கொண்டார். எனவே ஆகஸ்டு மாதம் ரசிகர்களை சந்தித்து பேசிய பிறகு அவர் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் ரஜினி அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக மும்பையில் அவரது மகள் சவுந்தர்யா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
எனது தந்தை (ரஜினி) எப்போதுமே மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் செய்வார். அவர் எதைச் செய்தாலும் சரியான நேரத்தில் செய்வார்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரி, நாங்கள் அவருக்கு ஆதரவாகவே இருப்போம்.
இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.
0 comments:
Post a Comment