விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றை கமல் தொகுத்து வழங்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.
இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்புக்கு தயாராகிவிட்டது. நாளை ஜீன் 25 இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும்.
இதில்கலந்துக் கொள்ளும் 14 பிரபலங்கள், 100 நாட்கள் வெளியுலகத்தை பார்க்காமல் ஒரே வீட்டிற்குள் அனைத்து வசதிகளுடன் இருக்கலாம்.
ஆனால் டிவி, செல்போன், நியூஸ் பேப்பர், ரேடியா உள்ளிட்ட எந்தவிதமான வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது தான் இந்த விதி.
நிறைய கேமராக்கள் இவர்களை கவனித்துக் கொண்டே இருக்கும்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துக் கொள்ள போகிறார்கள் என்ற பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
அவர்கள்…
அமலாபால்: திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை.
சடகோபன் ரமேஷ்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர்
ராய் லட்சுமி: கோலிவுட்டின் கவர்ச்சி நடிகை
ராதாரவி: பழம்பெரும் வில்லன் மற்றும் குணசித்திர நடிகர்
சஞ்சனா ஷெட்டி: ‘ரேணிகுண்டா’ நாயகியான இவர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்
அமித் ராகவ்: தொலைக்காட்சி சீரியல் நடிகர்
சிம்ரன்: கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிசி நடிகையாக இருந்தவர்.
உமா ரியாஸ்: குணசித்திர நடிகை
ராகவ்: ரஜினியின் ‘எந்திரன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர், தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர்.
பாலாஜி: சினிமா மற்றும் டிவி காமெடி நடிகர்
சஞ்சிதா ஷெட்டி: சூது கவ்வும், ரம் ஆகிய படங்களின் நாயகி
எச்.ராஜா: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்.
ஹேமங் பதானி: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்
நாஞ்சில் சம்பத்: அதிமுக தினகரன் அணியின் ஆதரவாளர், சிறந்த பேச்சாளர்.
இதை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட்டார்களா? எனத் தெரியவில்லை.
காரணம் இதில் உள்ள ராய்லட்சுமி, நான் அதில் கலந்து கொள்ளவில்லை. யாரோ? தவறாக என் படத்தை சேர்த்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
மிக பிஸியாக இருக்கும் இவர்கள் 100 நாட்கள் எந்தவிதமான வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருந்துவிடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அட அதானே போட்டியின் விதிமுறை என்கிறது இன்னொரு வட்டாரம்.
Name list of 14 celebrities going to participate with Kamal in Big Boss Show
0 comments:
Post a Comment