மூன்று நாளில் ரூ.64.77 கோடி வசூலித்த டியூப்லைட்
26 ஜூன், 2017 - 16:32 IST
சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டியூப்லைட். பட்டாளத்தில் போருக்கு போன தன் சகோதரன் திரும்பி வராததால் அவரை மீட்டு கொண்டு வரும் அண்ணன் பாசக்கதை. இதில் அண்ணன் - தம்பியாக சல்மான் மற்றும் சோகைல் கான் நடித்தினர். சல்மான், சற்று மனம் வளர்ச்சி குன்றியவராக நடித்திருந்தார். டியூப்லைட் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. சல்மானின் நடிப்பு செயற்கையாக இருப்பதாக கடும் விமர்சனம் எழுந்தது. அதோடு, வழக்கமான சல்மான் படம் இது இல்லை அவரது ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். அதனால் படத்தின் வசூலும் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. படம் வெளியான மூன்று நாளில் ரூ.64.77 கோடி வசூலித்திருக்கிறது. சல்மானின் முந்தைய படத்தோடு ஒப்பிடுகையில் இது குறைவு தான். இருந்தாலும் மோசமான வசூல் என்ற பெயர் டியூப்லைட் படத்திற்கு உருவாகவில்லை.
0 comments:
Post a Comment