Saturday, June 24, 2017

பாடலாசிரியரான நடிகை விஜயலட்சுமி


பாடலாசிரியரான நடிகை விஜயலட்சுமி



24 ஜூன், 2017 - 17:28 IST






எழுத்தின் அளவு:






Vijayalakshmi-turn-as-lyricist


இயக்குநர் அகத்தியனின் மகள் எனும் அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. சென்னை 600028, அஞ்சாதே போன்ற படங்களில் மூலம் பிரபலாமானார். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. உதவி இயக்குநர் பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் தயாரிப்பாளராக மாறி "பண்டிகை" என்ற படத்தை தயாரித்து வருகிறார். அவரின் கணவர் பெரோஸ் இயக்க, கிருஷ்ணா, ஆனந்தி ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்துள்ளனர். தயாரிப்பாளராக மட்டுமல்லாது இப்படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அவதரித்திருக்கிறார் விஜயலட்சுமி. அடியே என தொடங்கும் பாடலை அவர் எழுதியுள்ளார்.

கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலக்ஷ்மி, இந்தப்படத்திற்காக நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம், ஆனால் அவர்கள் தந்த பாடல் திருப்தி அளிக்கவில்லை, விஜயலக்ஷ்மி தான் எழுதலாமா என கேட்டார், நானும் தடுக்கவில்லை. அவர் எழுதியிருந்த வரிகளை படித்து மலைத்து போனேன். இப்பாடலின் மூலம் இப்படம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்கிறார் இயக்குநர் பெரோஸ்.

பண்டிகை படம் ஜூலை 7ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆராஸ் சினிமாஸ் இப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.


0 comments:

Post a Comment