Monday, June 26, 2017

பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆருக்கு சிபாரிசு செய்த கருணாநிதி


பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆருக்கு சிபாரிசு செய்த கருணாநிதி



26 ஜூன், 2017 - 11:32 IST






எழுத்தின் அளவு:






Flashback-:-Karunanidhi-recommends-MGR


மார்டன் தியேட்டர் சுந்தரம் தயாரித்த படம் மந்திரி குமாரி. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியை அடிப்படையாக வைத்து முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய நாடகம். அதையே திரைப்படமாக தயாரிக்க சுந்தரம் விரும்பினார். அப்போது மார்டன் தியேட்டர்சின் கதை இலாகாவில் இருந்த கருணாநிதி, சினிமாவுக்கான வசனத்தையும், திரைக்கதையையும் எழுதினார்.

மந்திரிகுமாரியில் யாரை நாயகனாக நடிக்க வைப்பது என்று தயாரிப்பாளர் சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தபோது கருணாநிதி அவரிடம் சென்று "என் நண்பர் ராமச்சந்திரனை போடுங்கள் நன்றாக நடிப்பார்" என்றார். அதற்கு முன்பே கருணாநிதியின் வசனத்தில் ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி படங்களில் நடித்திருந்தார் எம்.ஜி.ஆர். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ஆனாலும் கருணாநிதியின் சிபாரிசை சுந்தரம் ஏற்கவில்லை. "அவருக்கு இரட்டை நாடி ஆளும் அழகாக இல்லை" என்றார். அதற்கு கருணாநிதி "இரட்டை நாடியை மறைக்க சின்னதாக தாடி வச்சிடலாம்" என்று யோசனை சொன்னார். அதை ஏற்றார் சுந்தரம். எம்.ஜி.ஆர் மந்திரிகுமாரியில் நடித்து ஹீரோ அந்தஸ்தை பெற்றார். அன்று விமர்சிக்கப்பட்ட இரட்டை நாடிதான் இரண்டு தலைமுறையாக சினிமாவை ஆண்டது.


0 comments:

Post a Comment