அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது போஸ்டரும் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில், விஜய் படத்துக்கு மெர்சல் பெயர் சூட்டியது ஏன்? என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு விவாதங்கள் நடக்கின்றன. மெர்சல் என்ற வார்த்தை அசந்து போவது, வியப்பு, இன்ப அதிர்ச்சி என்பதை குறிக்கும். வட சென்னையில் வசிக்கும் மக்கள் மெர்சல் வார்த்தையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
விக்ரம் நடித்த `ஐ’ படத்தில் இடம் பெற்ற நான் மெர்சலாயிட்டேன் என்ற பாடலுக்கு பிறகு இந்த வார்த்தை பிரபலமானது. அதன் பிறகு நிறைய படங்களிலும் பயன்படுத்தப்பட்டது. `மெர்சல்’ படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார். அவரது ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை அசர வைக்கும் என்பதை குறிக்கும் விதமாகவே மெர்சல் என்று பெயர் வைத்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment