Thursday, June 22, 2017

விஜய்க்கு 4 ஆயிரம் அடி பேனர்: மாஸ் காட்டிய நெல்லை ரசிகர்கள்!!









விஜய்க்கு 4 ஆயிரம் அடி பேனர்: மாஸ் காட்டிய நெல்லை ரசிகர்கள்!!



22 ஜூன், 2017 - 14:33 IST






எழுத்தின் அளவு:






4000-Feet-banners-for-Vijay-by-nellai-fans


விஜய் நடித்த படங்கள் பற்றிய ஒவ்வொரு தகவல்கள் வெளியாகும்போது அதை அவரது ரசிகர்களும் டிரண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், இன்று ஜூன் 22-ந்தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால், நேற்று மாலை 6 மணிக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 61வது படத்தின் டைட்டீல் மெர்சல் என்று அறிவிக்கப்பட்டது. கூடவே விஜய்யின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது.
மேலும், நெல்லையைச்சேர்ந்த விஜய் ரசிகர்கள் 4 ஆயிரம் அடியில் விஜய்யின் அதிரடி பேனர் ஒன்றை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளனர். அதில் மக்கள் இயக்க தலைவரே, முடிசூடா மன்னனே, தங்கத்தளபதியே என்பது போன்ற பல்வேறு வாசகங்களும் இடம்பெற்றிருக்கிறது.
இந்நிலையில், நேற்று வெளியான மெர்சல் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தளபதி விஜய் என்று அவரது பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதுவரை இளைய தளபதி என்றே அழைக்கப்பட்டு வந்த விஜய்க்கு, இந்த படத்தில் தளபதியாக பிரமோஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் விஜய் பிறந்த நாள், மெர்சல் என்ற தலைப்பு, அப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இளைய தளபதி விஜய் தளபதியாக உயர்வு பெற்றது என பல சந்தோசங்களை இன்றைய தினம் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.




Advertisement








ஜூன் 25-ல் விஐபி-2 இசை, டிரைலர் வெளியீடு!ஜூன் 25-ல் விஐபி-2 இசை, டிரைலர் வெளியீடு! மஞ்சு வாரியர் குறித்த விஷாலின் வருத்தம்..! மஞ்சு வாரியர் குறித்த விஷாலின் ...










0 comments:

Post a Comment