பாடகியாக மாறிய ஐஸ்வர்யா ராய்
29 ஜூன், 2017 - 18:36 IST
மாஜி உலக அழகியான ஐஸ்வர்யா ராய், திருமணம், குழந்தை பிறப்பு என ஆன பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெக்ரா தயாரிப்பில், அதுல் மஞ்ரேக்கர் இயக்கும் "பேனி கான்" என்ற படத்தில் நடிக்க உள்ளார். படத்தில் ஐஸ்வர்யா ராய், பாடகியாகவே நடிக்கிறார். அவருடன், அனில் கபூரும் பாடகராக நடிக்கிறார். மேலும் படத்தில் அனில் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நிஜமாகவே பாட்டும் பாட இருக்கிறார்கள். மியூசிக்கல் படமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.
0 comments:
Post a Comment