ஒருவாரம் தள்ளிபோகும் பிருத்விராஜ் படம்..!
28 ஜூன், 2017 - 15:55 IST
பிருத்விராஜ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள 'தியான்' படம் நாளை வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஒரு வாரம் தள்ளிப்போய் வரும் ஜூலை-7ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்சன் பணிகளும் நிறைவுற்று சென்சாருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டதாம்.. இதில் சில ஆட்சேபனைக்குரிய காட்சிகளும் வசனங்களும் இருப்பதாக கூறி அதை நீக்கும்படி சொன்னார்களாம் சென்சார் அதிகாரிகள்..
ஆனால் படத்தின் இயக்குனர் ஜியேன் கிருஷ்ணகுமாரும் கதாசிரியர் முரளிகோபியும் அதற்கு தகுந்த விளக்கங்களை சென்சாரிடம் கூறினார்களாம். இந்த இழுபறியால் 'தியான்' படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. வடமாநில பின்பலத்தில் இந்தப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்தப்படத்தில் பிருத்விராஜ், அஸ்லான் முகமது என்கிற கேரக்டரிலும் அவரது சகோதரர் இந்திரஜித், பட்டாபிராமன் என்கிற கேரக்டரிலும் நடித்துள்ளார்கள்.. “ஒரு மனிதனை நம்பமுடியாத அதிசயம் ஒன்று சந்திக்கும்போது அங்கே வரலாற்றுக்காவியம் பிறக்கிறது” என்கிற டேக்லைனுடன் இந்தப்படம் உருவாகியுள்ளது.
0 comments:
Post a Comment