ஜிஎஸ்டி எதிரொலி : டிக்கெட் முன்பதிவுகள் நிறுத்தம்
30 ஜூன், 2017 - 12:17 IST
ஜுலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன. மாநகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சராசரியாக 120 ரூபாய் இருக்கும் கட்டணங்கள் 153 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
இது ஜிஎஸ்டி வரியைச் சேர்த்து மட்டுமே கணக்கிடப்பட்ட கட்டணம். ஆனால், நகராட்சி வரி 30 சதவீதம் வரை விதிக்கப்படலாம் என்ற கருத்து தியேட்டர் வட்டாரங்களில் நிலவுகிறது. அப்படி வரி விதிக்கப்பட்டால் டிக்கெட் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும். அது பற்றிய தெளிவான விவரங்கள் தியேட்டர்காரர்களுக்கு தெரியாத காரணத்தால் ஆன்லைனில் நாளை மற்றும் அதற்கு அடுத்த நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளங்கள், முன்னணி தியேட்டர்களின் இணையதளங்கள் இன்று மட்டுமே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவைக் காட்டுகின்றன. இதனால், நாளை, நாளை மறுதினம் விடுமுறை நாட்களில் படங்களைப் பார்க்க முன்பதிவு செய்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று வெளியாகும் படங்களின் வசூல் மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
திரையுலகத்தைச் சேர்ந்த சங்கங்கள் பல முறை இது பற்றி வேண்டுகோள் விடுத்தும் அவர்களுக்கு இன்னும் விவரமான பதில் வரவில்லை என்றே தெரிவிக்கிறார்கள். இன்று மாலைக்குள் தமிழ்நாடு அரசிடமிருந்த இது குறித்த ஆணை வெளியிடப்படலாம் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment