Friday, June 23, 2017

4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது நீலம் படப்பிடிப்பு


4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது நீலம் படப்பிடிப்பு



23 ஜூன், 2017 - 12:06 IST






எழுத்தின் அளவு:






Neelam-movie-shooting-begins-again


உனக்குள் நான், லைட்மேன் படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ்குமார் கடந்த 2012ம் ஆண்டு நீலம் என்ற படத்தை தொடங்கினார். மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா தொடங்கி வைத்தார்.

இது இலங்கையில் நடந்த உள்நாட்டு போரைப் பற்றிய கதை. ஸ்ரீ, பவித்ரா, ஜெகன், விஜய்குமார் உள்பட பலர் நடித்தனர். சதீஷ் சக்ரவர்த்தி இசை அமைத்தார். எஸ்.ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்தார். 50 சதவிகித படப்பிடிப்பு நடந்த நிலையில் இலங்கை போர் தொடர்பான படம் என்பதால் தணிக்கை குழுவில் பிரச்சினை வரும், வெளியிடுவதற்கு பல தடைகள் வரும் என்று கருதி படத்தை நிறுத்தி விட்டனர்.

ஆனால் தற்போது இலங்கை பிரச்னை தொடர்பான படங்கள் வெளிவருவதில் பெரிய சிக்கல் இல்லை. சில படங்கள் வெளிவந்தும் இருப்பதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள். படத்தின் டிரைலர் நாளை வெளிவருகிறது. படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


0 comments:

Post a Comment