மாயவன் படத்துக்கு யு/ஏ.. அலட்டிக்கொள்ளாத தயாரிப்பாளர்
23 ஜூன், 2017 - 10:19 IST
பல வெற்றிப்படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.வி.குமார் முதன்முறையாக இயக்கியுள்ள மாயவன் படம் ஜூலையில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள மாயவன் படத்தை ஸ்டூடியோ க்ரீன் மற்றும் அபி & அபி நிறுவனம் இணைந்து வெளியிடவுள்ளார்கள்.
'மாயவன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, கடந்த சில மாதங்களாக இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. ஃபேண்டசி கதை என்பதால் மாயவன் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்ததால், நீண்ட நாட்களாக அப்பணிகள் நடைபெற்று வந்தது.
ஜூலையில் வெளியிட திட்டமிட்டு தணிக்கைக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதைப் பற்றி சி.வி.குமார் அலட்டிக்கொள்ளவில்லை. காரணம் ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதால் தற்போது நடைமுறையில் இருந்து வரும் வரிவிலக்கு சலுகை ரத்து செய்யப்பட உள்ளது. எனவேதான் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் சி.வி.குமார்.
மாயவன் படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் 4ஜி என்ற படத்தை தயாரித்து வருகிறார் சி.வி.குமார். அந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.
0 comments:
Post a Comment