தபங் 3, அடுத்த ஆண்டு ரம்ஜான் ரிலீஸ்
25 ஜூன், 2017 - 13:59 IST
டைரக்டர் பிரபுதேவா தபங் 3 என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட்டில் தகவல் பரவியது. தற்போது இது உண்மை தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் சல்மான் கான் நடிக்கிறாராம். இப்படத்தின் சூட்டிங்கை சல்மான் கான் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவக்க உள்ளாராம். சல்மான் கான், ரெமோ டிசவுசா இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்தின் வேலைகள் மேலும் சில காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த இடைவெளியில் தபங் 3 படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சல்மான். தற்போது நடித்து வரும் டைகர் ஜிந்தா ஹை படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததும், தபங் 3 படத்தின் சூட்டிங்கில் சல்மான் கலந்து கொள்வாராம். இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என இன்னும் முடிவு செய்யவில்லையாம். இப்படத்தை அர்பாஸ் கான் தயாரிக்க உள்ளார். இப்படம் 2018 ம் ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment