தடையில்லாமல் வருமா தரமணி?
28 ஜூன், 2017 - 15:02 IST
அகலக்கால் வைக்கும் தயாரிப்பாளர்கள் ஒரு கட்டத்தில் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் என்பவர் சில வருடங்களுக்கு முன் மாசாணி என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு வந்தார். அதன் பிறகு ஒரே நேரத்தில் பல படங்களை வாங்கி வெளியிட்டார். உச்சகட்டமாக பைரவா படத்தை வாங்கி நஷ்டமடைந்தவர், மேலும் பேராசைப்பட்டு பாகுபலி-2 படத்தை வாங்கினார். அதோடு அவரது அத்தியாயம் முடிவடைந்தது. எஸ்கேப் மதனும் இப்படி அகலக்கால் வைத்தார்.
அதனால் அவர் தயாரித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் இந்த வாரம் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையில் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தரமணி படத்தை தயாரித்துள்ள ஜேஎஸ்கே நிறுவனமும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிறுவனம் வெளியிட்ட பல படங்கள் தோல்வியடைந்ததால், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு பண பாக்கி இருக்கிறதாம்.
இந்நிலையில் அஜித்தின் விவேகம் படத்தோடு தரமணி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தரமணி. யுவன் இசையமைத்திருக்கும் இப்படம் நீண்ட காலமாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது. ஒரு நாள் தள்ளி ஆகஸ்ட் 11-ம் தேதி தரமணி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்கள். குறிப்பிட்ட தேதியில் தரமணி வருமா?
0 comments:
Post a Comment