அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் மெர்சல் படத்தில் போஸ்டர்களும் வெளியாகின.
இந்த படத்தின் போஸ்டர்கள் எவ்வளவு ரீட்வீட் ஆகியிருக்கிறது என்பது வரை தற்போது போட்டி ஆரம்பமாகிவிட்டது.
இனி இதுவும் யூடியுப் சாதனை போன்று விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.
ஆனால் இந்த இரண்டு படத்திற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா என்ற ஒரே டிசைனர்தானாம்.
தெறி, கத்தி ஆகிய படங்களின் போஸ்டரையும் வடிவமைத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
The connection between Vivegam and Mersal posters
0 comments:
Post a Comment