Monday, June 26, 2017

அண்டாவை தூசி தட்டி எடுத்த தயாரிப்பாளர்


அண்டாவை தூசி தட்டி எடுத்த தயாரிப்பாளர்



26 ஜூன், 2017 - 10:47 IST






எழுத்தின் அளவு:






Andava-kaanom-ready-to-release


ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் அண்டாவ காணோம். இதனை சி.வேல்மதி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். பி.வி.சங்கர் இசை அமைத்துள்ளார். அஸ்வமித்ரா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷாலின் அண்ணி ஸ்ரேயா நடித்துள்ளார்.

தாய் வீட்டு சீதனமாக வந்த அண்டா மீது அதிக பிரியம் அந்த பெண்ணுக்கு. ஒரு நாள் அண்டாவை காணவில்லை. அவள் அந்த அண்டாவை தேடி கண்டுபிடிப்பதுதான் கதை. கிராமத்து பெண்ணின் அப்பாவித்தனத்தையும், பாசத்தை சேர்த்து சொல்லும் காமெடி கலந்த செண்டிமெண்ட் கதை. இதன் படப்பிடிப்புகள் முடிந்து ஒருவருடம் ஆகிவிட்டது. ஆனால் வெளிவராமல் தள்ளிக்கொண்டே போகிறது. இப்போது தயாரிப்பளர் அண்டாவை தூசி தட்டி எடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு படத்தின் பாடலையும், டீசரையும் வெளியிட்டு படத்தின் புரமோசன் பணியை துவங்கி உள்ளனர். கங்கை அமரன் இதில் "ஓ... அண்ணன்மாரே" என்ற பாடலை பாடியுள்ளார். . ஜூலை மாதம் படம் வெளிவரலாம் என்று தெரிகிறது.


0 comments:

Post a Comment