ரஜினி அரசியலுக்கு வர குடும்பத்தினர் எதிர்ப்பு ?
29 ஜூன், 2017 - 15:37 IST
ரஜினிகாந்த் சில வாரங்களுக்கு முன்பு ரசிகர்களைச் சந்திக்கும் போது அரசியலுக்கு வரலாம் என்ற ரீதியில் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள் ஊடகங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதன் பின் நேரடியாக எந்த பதிலையும் தெரிவிக்காமல் ரஜினிகாந்த் காலா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், அங்கிருந்தபடியே அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் உடல் பரிசோதனை செய்ய இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நெருக்கமானவர் சொன்னதாக பாலிவுட் வட்டாரங்களில் தற்போது ஒரு செய்தி பரவி வருகிறதாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது குடும்பத்தினருக்கு விருப்பமில்லையாம். ஏதோ ஒரு தூண்டுதலால் அவர் அரசியல் கருத்துக்களைப் பேசியுள்ளதாகவும், அவர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் இன்னும் பலத்த யோசனையில்தான் இருக்கிறார் என்றும் அதனால்தான் பலரையும் சந்தித்துப் பேசி வருகிறார் என்கிறார்கள். அமிதாப்பச்சன் அரசியலுக்கு வந்து தோல்வியுற்று பின்னர் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தியதையும் அவர்கள் உதாரணமாகச் சொல்கிறார்கள்.
சினிமாவில் நடிப்பதற்கே அவருடைய குடும்பத்தினர் அவரது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு கவனமாக இருக்கிறார்கள். அரசியலுக்குள் நுழைந்தால் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். அது அவருக்கு சரியாக வராது என்றும் கவலைப்படுகிறார்களாம்.
தன் மகள்கள் சொல்வதை அதிகமாகக் கேட்கும் ரஜினிகாந்த், மகள்களின் விருப்பத்திற்கு எதிராக அரசியலுக்குள் வருவாரா என்பது தொடர் கேள்விக்குறிதான்.
0 comments:
Post a Comment