பாகுபலிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதேவி
27 ஜூன், 2017 - 12:57 IST
ராஜமவுலி இயக்கத்தில் உருவான பிரமாண்ட படம் பாகுபலி. இந்த படத்தை இந்தியிலும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததால் ஸ்ரீதேவியை ராஜமாதா வேடத்தில் நடிப்பதற்கு அணுகினார் ராஜமவுலி. ஆனால், ஸ்ரீதேவி கேட்ட சம்பளத்தை பாகுபலி படக்குழு கொடுக்க முன்வராததால் அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் அந்த வேடத்திற்கு ரம்யாகிருஷ்ணனை புக் பண்ணினார்கள். ராஜமவுலி எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
இந்த நிலையில், இங்கிலீஷ் விங்கிலீஷ், புலி படங்களைத் தொடர்ந்து தற்போது மாம் என்ற இந்தி படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி. இந்த படம் ஜூலை 7-ந்தேதி திரைக்கு வருகிறது. தமிழில் அம்மா என்ற பெயரில் வெளியாகிறது. இந்நிலையில், பாகுபலியில் நடிக்க மறுத்தது குறித்து ஸ்ரீதேவியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுமே வெளியாகி ஓடி முடித்து விட்டது. அதனால் அது முடிந்துபோன கதை. அதைப்பற்றி இப்போது பேசி எந்த பயனும் இல்லை.
நான் பல படங்களில் நடிக்க மறுத்துள்ளேன். அதை பற்றி யாருமே பேசுவது இல்லை. அந்தபடத்தில் நடிக்க நான், ரூ.10 கோடி, ஹோட்டலில் ஒரு தளம் முழுவதும், 8 விமான டிக்கெட்டுக்கள் கேட்டதாக வதந்தி உள்ளது. நான் சினிமா துறையில் 50 ஆண்டுகளாக உள்ளேன். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இப்படி அடாவடி செய்தால் என்னால் இந்த துறையில் தாக்குப்பிடித்திருக்க முடியுமா? இது போன்ற செய்திகளை கேட்டு வேதனையாக உள்ளது. மேலும் ராஜமவுலி, அப்படி பேசியது சற்று வருத்தமாக உள்ளது என்று பாகுபலி பற்றிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் ஸ்ரீதேவி.
0 comments:
Post a Comment