அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிதுது வருகிறார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளரும் நடிகரும் விஜய்யின் தீவிர ரசிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது…
”மெர்சல்’ படத்தில் ஒரு எனர்ஜெடிக்கான பாடலை பாடியுள்ளேன்.
என்னுடைய ஃபேவரைட் இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் விஜய் அண்ணா அவர்களின் படத்தில் பாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
GV Prakash joins with Vijay in Mersal
0 comments:
Post a Comment