Thursday, June 29, 2017

'அம்மா' மீட்டிங்கில் 'சைலன்ட்' ஆன திலீப் - பாவனா விவகாரம்..!


'அம்மா' மீட்டிங்கில் 'சைலன்ட்' ஆன திலீப் - பாவனா விவகாரம்..!



29 ஜூன், 2017 - 17:05 IST






எழுத்தின் அளவு:






No-discuss-about-Bhavana-and-Dileep-in-Amma-Meeting


AMMA என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்திற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் தலைவரான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் இன்னொசன்ட், பொதுச்செயலாளரான மம்முட்டி, துணைத்தலைவர் மோகன்லால் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாளரான திலீப் மட்டும் போலீசாரின் விசாரணைக்கு செல்ல வேண்டி இருந்ததால் இந்தகூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தவிர இந்த கூட்டத்தில் திலீப்-பாவனா விவாகரம் விவாதிக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் நேற்று அவர்கள் விவகாரத்தை பற்றி சங்கத்தில் உள்ள' முக்கிய உறுப்பினர்கள் உட்பட யாரும் வாய்திறக்கவில்லை. இதுபற்றி கூறிய நடிகர் சங்க தலைவர் இன்னொசன்ட், “இந்த விவகாரம் தற்போது போலீஸ் வசம் இருக்கிறது. இன்று விசாரணையும் நடக்க இருக்கிறது. அதனால் இந்த சமயத்தில் இதுபற்றி நாம் விவாதிக்க தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறினார். இந்த முடிவின் பின்னணியில் மம்முட்டியும் மோகன்லாலும் இருப்பதாக ஒரு தகவலும் கசிந்துள்ளது.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திலீப் கலந்து கொண்டார். ஆனால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாவனா கலந்து கொள்ளவில்லை. அதேபோல திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டார்.


0 comments:

Post a Comment